/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சி தலைவருக்கு அமைச்சர் பாராட்டு
/
ஊராட்சி தலைவருக்கு அமைச்சர் பாராட்டு
ADDED : ஜன 20, 2024 11:28 PM
கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.கே.ரமேஷ்.
இவர் இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்.இவர் இந்த பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு தோறும் 150 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள், பள்ளிக்கு ஐந்து கம்ப்யூட்டர் வழங்கியுள்ளார். தற்போது பள்ளி வளாகத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சமீபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேைஷ அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டினர்.

