ADDED : ஜன 13, 2024 09:40 PM
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே, செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு, 24. லாரி கிளீனராக பணியாற்றி வருகிறார். கடந்த, 9ம் தேதி மணிகண்டன் என்பவரின் லாரியில் பணியாற்றி விட்டு, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில், இரவு லாரியிலேயே துாங்கினார்.
இரவு, சிறுநீர் கழிக்க பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறைக்கு சென்று விட்டு லாரிக்கு திரும்பினார்.அப்போது அங்கு வைத்திருந்த மொபைல் போன் மற்றும் 2,000 ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் சின்ராசு புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் பேட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த யாகூப், 19, சுரேஷ், 19 ஆகிய இருவரை விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பணம், மொபைல் போன் ஆகியவற்றை திருடியதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

