/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுபாலத்தால் விபத்து அபாயம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சிறுபாலத்தால் விபத்து அபாயம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சிறுபாலத்தால் விபத்து அபாயம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சிறுபாலத்தால் விபத்து அபாயம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 26, 2025 02:03 AM

பழவேற்காடு:பழவேற்காடில் இருந்து தோணிரவு கிராமத்திற்கு செல்லும் சிமென்ட் சாலையில் சிறுபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலை குறுகலாக உள்ளது. பாலமும், சாலையும் இணையும் இடத்தின் ஓரங்களில் பள்ளங்கள் உள்ளன.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். எதிரெதிரே வாகனங்கள் பாலத்தை கடக்கும்போது, இடதுபுறம் ஒதுங்கினால் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.
சாலை பணிகளை மேற்கொள்ளும் போது, பாலத்தின் இருபுறமும் சரிவர இணைக்காமல் விடப்பட்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், பாலத்தின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்க விடுத்துள்ளனர்.