ADDED : ஜன 18, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, சமூக நீதி அனைத்து வகை வாகன ஓட்டுனர்கள் சார்பில், நேற்று ஹிட் மற்றும் ரன் சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யக் ோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சாலை விதிகளை பள்ளி பாடத் திட்டத்திலேயே கொண்டு வரவேண்டும். வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.
ஹிட் மற்றும் ரன் சட்ட திருத்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின், கலெக்டர் அலுவலகத்தில், 10 அம்ச கோரிக்கைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

