/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நத்தம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
நத்தம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஜன 23, 2024 05:22 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, தம்புரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து, நத்தம் வழியாக, மூனு
ரோடு வரையிலான, 4 கி.மீ., சாலை, ஒன்றிய அலுவலக பராமரிப்பில் இருந்த சாலையாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலை துறையின் கிராமப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் அந்த சாலை சேர்க்கப்பட்டுள்ளது.
சுண்ணாம்புகுளம், ராக்கம்பாளையம், ஓபசமுத்திரம் உட்பட, 20 கிராம மக்கள், கும்மிடிப்பூண்டி நகருக்கு வந்து செல்லும் முக்கிய சாலையாகும். கடந்த, 2019ம் ஆண்டு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் சார்பில், 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அந்த சாலை பழுதாகி போனது.
அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட போதிலும், தரமின்றி சாலை அமைக்கப்பட்டதால், கடந்த மாதம் பெய்த கனமழையின் போது முற்றிலும் சேதமடைந்து சாலை முழுதும் குண்டும் குழியுமாக மாறியது.
அந்த சாலையில் ஒரு முறை டூ-- வீலரில் பயணித்தால் இரண்டு நாட்களுக்கு உடல் வலி இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புற மக்களின் நலன் கருதி, நெடுஞ்சாலை துறையினர் அந்த சாலையை தரமாக புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

