/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா 1,000 முதியோரை அனுப்ப திட்டம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
/
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா 1,000 முதியோரை அனுப்ப திட்டம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா 1,000 முதியோரை அனுப்ப திட்டம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா 1,000 முதியோரை அனுப்ப திட்டம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
ADDED : ஜன 21, 2024 12:19 AM
திருப்போரூர், : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தை கிருத்திகை விழாவை, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் சிறப்பு விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
இவ்விழாவில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, ஒரு நாள் முழுதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். மூலவர் கந்தபெருமானை தரிசனம் செய்தார்.
பின் சேகர்பாபு கூறியதாவது:
திருப்போரூர் முருகர் கோவிலில், ஏற்கனவே கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபம், இந்த ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது.
கோவில் அலுவலகம் கட்டும் பணி, 94 லட்சம் ரூபாய் செலவில் முடிவுபெறும் நிலையில் உள்ளது.
புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணிக்கு, 6.65 கோடி செலவில் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. சிதம்பர சுவாமிகள் மடம் புதுப்பிக்கும் பணி, 47 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது.
தை கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் திட்டத்தை துவக்கியுள்ளோம். எட்டு கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தாண்டு மேலும் மூன்று கோவில்களுக்கு இத்திட்டம் அறிவிக்கப்படும்.
ஒரு வேளை அன்னதான திட்டத்தில், 10 கோவில்கள் இணைக்கப்பட்டன. இந்தாண்டு, மேலும் ஏழு கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு, சராசரியாக 92,000 பக்தர்கள், ஒரு வேளை உணவு அருந்துகின்றனர்.
இதற்கு, ஒரு ஆண்டிற்கு, 105 கோடி ரூபாய் செலவாகிறது.
அதே போல், நில மீட்பை பொறுத்தவரை, 6,021 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 5,557 கோடி ரூபாய்.
அறுபடை வீடுகள் என்று போற்றப்படும் திருச்செந்துார், பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கு, 60 - ௭௦ வயதுள்ள ௧,௦௦௦ பேரை, ஓராண்டிற்குள் கட்டணமில்லாமல் இரண்டு நாட்கள் உணவு மற்றும் தங்கும் வசதியோடு, சிறப்பு தரிசனம் அழைத்து செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம், காசிக்கு கடந்தாண்டு 200 பேர் அரசு மானியத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இந்தாண்டு, 300 பேரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து கட்டங்களாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
கோவில்கள் அனைத்தும் துாய்மையாகவே பாராமரிக்கப்பட்டு வருகின்றன. சுத்தமாக இருக்கும் கோவில்களை, சுத்தம் செய்வது போல் அரசியல் காட்சி படுத்திக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே சுத்தமாக இருப்பதை சுத்தம் செய்யும் வித்தையை, பா.ஜ.,வினர் செய்து கொண்டிருக்கின்றனர்.
மற்றொருபுறம், கவர்னரும் ஒரு வாளியை துாக்கிக்கொண்டு, சுத்தம் செய்வதாக புறப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

