/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்
/
திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்
ADDED : ஜன 23, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி துணை மின்நிலையத்தில் நகரம்-1 ல், திருத்தணி பிரிவில் டிப்போ மின்பாதையில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டுள்ளனர். சாலைக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை இன்று மாற்றி அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால் இன்று காலை 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஜெ.ஜெ.ரவிநகர், எம்.ஜி.ஆர்.நகர், கஸ்துாரிபாய் தெரு, கண்ணன் நகர், வாரியார் நகர், நேதாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.

