/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்
/
நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்
நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்
நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை அமைக்க தனியார் கட்டடம் அகற்றம்
ADDED : செப் 11, 2025 03:17 AM

திருவள்ளூர்:திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே இணைப்பு சாலை அமைக்க, அருகிலிருந்த தனியார் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடி - ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., ஆறுவழிச்சாலையாக மாற்றும் பணி, 2011ம் ஆண்டு துவங்கியது.
அப்போது, சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை இணைப்பு பணி, ஏழு ஆண்டுகளாக முடங்கியது.
இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2023ல் துவக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணி முடியும் வகையில், சாலை அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் சாலை அமைக்க, அங்கிருந்த இரண்டடுக்கு கட்டடம் நேற்று அகற்றப்பட்டது. கட்டடம் முழுதும் இடித்து அகற்றிய பின், சர்வீஸ் சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது.