sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்... நிறுத்தம்:திருத்தணியில் மக்கள் வரிப்பணம் ரூ.90 லட்சம் வீண்

/

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்... நிறுத்தம்:திருத்தணியில் மக்கள் வரிப்பணம் ரூ.90 லட்சம் வீண்

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்... நிறுத்தம்:திருத்தணியில் மக்கள் வரிப்பணம் ரூ.90 லட்சம் வீண்

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்... நிறுத்தம்:திருத்தணியில் மக்கள் வரிப்பணம் ரூ.90 லட்சம் வீண்


ADDED : செப் 18, 2025 11:26 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், மக்கள் வரிப்பணம் 90 லட்சம் ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், தினமும் 1,8-20 டன் குப்பை சேருகிறது. குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரிக்கப் படுகிறது.

மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.

அதாவது, காய்கறி கழிவு, பூ மார்கெட்டு கழிவு, ஓட்டல் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியே கொட்டப்படும் வாழை இலை ஆகிய கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு, கடந்த 2013ம் ஆண்டு, நகர் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ், 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தாமதம்


கடந்த 2013, அக்., 2ம் தேதி இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம், 13வது வார்டு, அரக்கோணம் சாலை ஒன்றிய அலுவலகம் எதிரில் 9,600 சதுர அடியில், இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியது.

ஆறு மாதங்களில் பணி முடிந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், ஒன்றரை வருடத்திற்கு பின் தான் பணி முழுமையாக முடிக்கப்பட்டது. தொடர்ந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு நிறுவனத்தில் இருந்து சான்று கிடைக்காததால், மேலும் ஒரு வருடம் தாமதம் ஆனது.

ஒரு வழியாக 2019ம் ஆண்டு மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் இருந்து சான்று கிடைத்ததும், 2020 ம் ஆண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பின் ஆறு மாதங்கள் மின்சாரம் தயாரித்து அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளுக்கு முதலில் மின்வினியோகம் செய்யப்பட்டது.

மேலும், ஜெனரேட்டர் இயக்கும் அளவுக்கு மின்சாரம் தயாரித்த நிலையில், அப்போது பெய்த கனமழையால் காய்கறி அரைக்கும் அறை முழுதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

திட்டம் தோல்வி


அதற்கு பின் வந்த அதிகாரிகளும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முனைப்பு காட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளன.

இது குறித்து, திருத்தணி நகராட்சியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சாண எரிவாயு தொட்டி மற்றும் காய்கறி அரைக்கும் அறை ஆகியவை தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் கனமழை பெய்தால் அப்பகுதி முழுதும் மழைநீர் சூழ்ந்துவிடுகிறது.

மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் காய்கறி, இறைச்சி மற்றும் வாழை இலை போன்ற கழிவுகள் தற்போது நகராட்சியில் கிடைக்கவில்லை. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

350 யூனிட் தயாரிக்கலாம்
நகராட்சியில் சேகரிக்கப்படும், காய்கறி மற்றும் வாழை இலை போன்ற கழிவுகளை இயந்திரம் மூலம் அரைத்து, சாண எரிவாயு தொட்டியில் கொட்டி, பையோ - காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 350 யூனிட் மின்சாரம் தயாரிக்கலாம். இந்த மின்சாரத்தின் மூலம், நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன மின்தகன எரிமேடை, ஆட்டு அறுக்கும் தொட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளுக்கு மின்வினியோகம் செய்ய முடியும்.








      Dinamalar
      Follow us