ADDED : ஜன 23, 2024 05:30 AM

நந்திவரம் புதுபாளையத்தம்மன் கோவிலில், கூடுவாஞ்சேரி நகர பா.ஜ. நிர்வாகிகள், எல்.இ.டி. திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்த பா.ஜ.வினர் திரண்டனர்.
அவர்களிடம், போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து, பா.ஜ. சட்ட ஆலோசகர் சகிலா, நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது என, உதவி கமிஷனர் ஜெயராஜ், தாம்பரம் கமிஷனர் ஆகியோருக்கு தெரிவித்தார். இதையடுத்து, அனுமதி வழங்கப்பட்டது. நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், 11:40 மணிக்கு, திடீரென மின் தடை ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த பக்தர்கள், கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று, உதவி செயற்பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின், 12:02 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.

