/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பத்தோடு மழைநீர் கால்வாய் பணி
/
மின்கம்பத்தோடு மழைநீர் கால்வாய் பணி
ADDED : பிப் 01, 2024 09:48 PM

கடம்பத்துார்:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், மழைநீர் கால்வாய் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்கள் அகற்றப்படாமலேயே பணி நடந்து வருகிறது.
சில இடங்களில் நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காம்பவுண்ட் சுவர் உட்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் மழைநீர் செல்வதில் கடும் சிரமம் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

