/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளைநிலங்களில் மழைநீர் தேக்கம் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
/
விளைநிலங்களில் மழைநீர் தேக்கம் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
விளைநிலங்களில் மழைநீர் தேக்கம் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
விளைநிலங்களில் மழைநீர் தேக்கம் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 18, 2024 10:06 PM

பொன்னேரி:மீஞ்சூர் வேளாண் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 33,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. 'மிக்ஜாம்' புயல் மழைக்கு தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த 7ம் தேதி பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், தற்போது விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.ஒரு சில இடங்களில் நெற்பயிர்கள் தலைசாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன.
அறுவடை நேரத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி, வெளியேறாமல் இருப்பதால், அறுவடை பணிகள் பாதித்து வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:வழக்கமாக பொங்கல் திருநாள் முடிந்தவுடன், அறுவடை பணிகளை துவக்குவோம். அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவோம்.
தற்போது, விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், இயந்திரம் வாயிலாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடிவதற்கும் வழியில்லை.
இதனால், அறுவடை பணிகள் மேலும் சில நாட்களாகும். நீண்ட நாள் மழைநீரில் பயிர்கள் இருந்தால், அழுகி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

