/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு
/
ரூ.1.75 கோடி மதிப்பு கோவில் சொத்து மீட்பு
ADDED : ஜன 24, 2024 12:36 AM

மண்ணடி:மல்லிகேஸ்வரர் கேசவ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து, நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.
சென்னை, மண்ணடியில் மல்லிகேஸ்வரர் கேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு மண்ணடி, ஜீல்ஸ் தெருவில், 1,056 சதுரடி பரப்பளவில், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது.
இந்த இடத்தை முத்துகுமரன், பாலாஜி என்பவர்களுக்கு, கோவில் நிர்வாகம் வாடகைக்கு விட்டது. இவர்கள், கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல், 15 ஆண்டுகளாக வணிக வளாகமாக பயன்படுத்தி, உள்வாடகைக்கு விட்டிருந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்ததையடுத்து, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, கோவில் நிர்வாகிகள், முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் கோவில் பணியாளர்களால், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த சொத்து கோவில் வசம் பெறப்பட்டது.

