/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலைகள் படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 24, 2024 12:39 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 228 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 750க்கும் மேற்பட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி தார்ச் சாலைகள் உள்ளன.
இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக சாலைகள் பராமரிக்காததால் தற்போது தார்ச்சாலைகள் சேதம் அடைந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளன.
உதாரணமாக செருக்கனுார், வீரகநல்லுார், தாடூர், பட்டாபிராமபுரம் மற்றும் சின்னகடம்பூர் ஆகிய ஊராட்சிகளில் பெரும்பாலான தார்ச்சாலைகள் பழுதடைந்து ஜல்லிக்கற்களாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், சேதம் அடைந்த சாலைகளில் விவசாயிகள் விளைவித்த தானியங்களை, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் வாயிலாக கொண்டு வருவதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.
பழுதடைந்த சாலைகளை சீரமைக்காமல் ஒன்றிய நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி சாலைகளை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

