/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்களிடம் நுாதன முறையில் ரூ.35,000 ‛'அபேஸ்'
/
பெண்களிடம் நுாதன முறையில் ரூ.35,000 ‛'அபேஸ்'
ADDED : ஜன 24, 2024 12:31 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா மாம்பாக்கசத்திரம் கிராமம் சேர்ந்தவர் சுகுணா, 56. லட்சுமாபுரம் அடுத்த தன்ராஜ் கண்டிகை சேர்ந்தவர் லைலா,50. இவர்கள் இருவரும் நேற்று திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்கு வந்தனர்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த வாலிபர் ஒருவரிடம் சுகுணா தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, பணத்தை எடுத்து தருமாறு கூறினார்.
கார்டை வாங்கிய வாலிபர் இயந்திரத்தில் செலுத்தி, ரகசிய குறீயிடு எண் கேட்டு பணம் எடுப்பது போல் காட்டி, தற்போது சர்வர் பழுது என வேறு ஒரு வங்கி கார்டு போல் போலியாக கார்டு கொடுத்தார்.
அதே மையத்தில் இருந்த தன்ராஜ்கண்டிகை சேர்ந்த லைலாவும், தனது ஏ.டி.எம். கார்டு அதே வாலிபரிடம் கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கொடுத்தார்.
மீண்டும் ரகசிய குறியீடு எண் கேட்டு அறிந்து, கார்டை இயந்திரத்தில் செலுத்தி வேலை, கார்டு வேலை செய்யவில்லை எனக் கூறி, லைலாவிடம் போலியான ஏ.டி.எம். கார்டு கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பின், மர்ம வாலிபர் திருத்தணி சித்துார் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில், சுகுணா கார்டில், 15,000 , லைலா கார்டில், 20, 000 என மொத்தம், 35.000 ரூபாய் திருடிச் சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இரு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமிரா பதிவுகள் வைத்து விசாரித்து வருகின்றனர்.

