/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் கழிவுநீர் தேங்கி குளமான பெருமாள் கோவில் சாலை
/
திருமழிசையில் கழிவுநீர் தேங்கி குளமான பெருமாள் கோவில் சாலை
திருமழிசையில் கழிவுநீர் தேங்கி குளமான பெருமாள் கோவில் சாலை
திருமழிசையில் கழிவுநீர் தேங்கி குளமான பெருமாள் கோவில் சாலை
ADDED : செப் 19, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் சாலையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தெற்கு மாடவீதியில், சாலை சேதமடைந்து உள்ளது. நேற்று பெய்த மழையில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது.
சாலை சகதியாக உள்ளதால் மக்கள், பள்ளி செல்லும் மாணவ- - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், பேரூராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருமழிசை மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.