/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பீதி

ADDED : ஜூலை 05, 2025 02:04 AM

திருவாலங்காடு:சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இதனால், பத்திரப்பதிவுக்கு வருவோர் பீதி அடைந்துள்ளனர்.
திருவாலங்காடு சார் - பதிவாளர் அலுவலகம், வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் அருகே, 2017ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு, தினமும்குறைந்தபட்சம் 40 பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன. இதற்காக, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஒரு மாதமாக கட்டடத்தின் நுழைவாயில் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அலுவலக நுழைவாயில் எதிரே, 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சுற்றித்திரிந்தது.
இதனால், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.