/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயரதிகாரிகள் பங்கேற்காத உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
உயரதிகாரிகள் பங்கேற்காத உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : அக் 14, 2025 08:24 PM
திருத்தணி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில், துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்காததால், மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' அங்குள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. முகாமில், நல்லாட்டூர், தாழவேடு, பொன்பாடி மற்றும் பூனிமாங்காடு ஆகிய நான்கு ஊராட்சி மக்கள் மனு அளித்தனர்.
முகாமில், உயரதிகாரிகள் பங்கேற்காமல், அலுவலர்களே மனுக்கள் பெற்றனர். மேலும், மனுதாரர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் துறை அலுவலர்கள் திணறினர்.
ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், தாசில்தார் ராஜேஷ் தலைமையில் நடந்தது.
இதில், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், மேலக்கரமனுார், நந்திமங்களம் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பட்டா மாற்றம், இலவச வீடு, குடும்ப அட்டை, மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக மனுக்களை வழங்கினர்.

