/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் தை கிருத்திகை 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் தை கிருத்திகை 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் தை கிருத்திகை 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் தை கிருத்திகை 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஜன 20, 2024 11:31 PM

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் தை கிருத்திகை விழாவை ஒட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தீபாராதனை
காலை, 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நேற்று தைக்கிருத்திகை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் தேர்வீதியில் குவிந்தனர்.
இதில் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பொதுவழியில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
lஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றத்தில், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார்.
நித்திய பூஜையும், கிருத்திகை உள்ளிட்ட உற்சவங்கள் நடந்து வருகின்றன.
தை மாத கிருத்திகையை ஒட்டி நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், மலைக்கோவிலில் உள்பறப்பாடு எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள், சுவாமியுடன் வலம் வந்தனர்.
சிறப்பு தரிசனம்
ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், கரிக்கல் முருகன் மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று சிறப்பு தரிசனம் நடந்தது.

