/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழக -- ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர சோதனை
/
தமிழக -- ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர சோதனை
ADDED : ஜன 13, 2024 09:31 PM

ஊத்துக்கோட்டை:சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் - சத்தியவேடு மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி.
சென்னையில் இருந்து நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், சித்துார், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.
இதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம், நெல்லுார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.
நாளை, 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், வரும், 22ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவும் நடைபெற உள்ளது.
அசம்பாவிதங்கள் தவிர்க்க மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ்கல்யாண் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் போலீசார், ஆந்திராவின் திருப்பதி, சத்தியவேடு ஆகிய சாலை மார்க்கமாக, தமிழகத்தை நோக்கி வந்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

