நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புங்கத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், 35. இவர் தன் சகோதரி மகன் சரண்குமார், 23 என்பவரை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக சரண்குமார் இதய வால்வு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்குமார் கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் துாங்க சென்றார்.
மறுநாள் காலை தமிழரசன் அவரை எழுப்ப சென்றபோது சரண்குமார் மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுகுறித்து தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார், உடலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

