/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பாலம்
/
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பாலம்
ADDED : பிப் 01, 2024 09:46 PM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை, 16 கி.மீ., துாரம் கொண்டது.
இச்சாலையில் ஏரி, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து உபரிநீர் விவசாய நிலங்களுக்கு செல்ல சாலையில் தேவையான இடங்களில் கல்வெட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று திருவாலங்காடில் நட்டேரி நீர் விவசாய நிலங்களுக்கு பாயும் வகையில், மாநில நெடுஞ்சாலையில் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு பாலம் சாலையுடன் இணைந்தபடி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அறியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக புலம்புகின்றனர்.
இந்நிலையில் கல்வெட்டு பாலம் உள்ள இடத்தை இரவில் வாகன ஓட்டிகள் அறியும் படி, ரிப்ளக்டர் மற்றும் எச்சரிக்கை பலகை அமைத்து நெடுஞ்சாலை துறையினர் தெரியப்படுத்த வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

