/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை இழுத்து சென்று 2 சவரன் செயின் பறிப்பு
/
பெண்ணை இழுத்து சென்று 2 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஜன 19, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஆரணி, 50. நேற்று முன்தினம் மாலை, மேட்டுக்குப்பத்தில் இருந்து எளாவூர் நோக்கி நடந்து சென்றார்.
அப்போது, மகாலிங்கம் நகரில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரிடம் பேச்சு கொடுத்தார். பின், அந்த பெண்ணை தரதரவென அருகில் உள்ள பாழடைந்த கட்டத்திற்கு இழுத்து சென்றார்.
அங்கு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

