/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகரியில் 21 உற்சவர்கள் சந்திப்பு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

ADDED : ஜன 19, 2024 01:32 AM

நகரி:நகரி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, பார்வேட்டை திருவிழாவில், 21 உற்சவர்கள் சந்திப்பு விழா நடந்தது. இதில், 40,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சித்துார் மாவட்டம் நகரி மண்டபம் அருகே வழித்துணை வருவாய் விநாயகர் கோவில் வளாகத்தில், நாராயணவனம் அடுத்த சீலகரம் அகத்தீஸ்வரர் மற்றும் திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கரீம்பேடு நாததீஸ்வரர் ஆகிய உற்சவர்கள், சிறப்பு அலங்காரத்தில் காகவேடு, நகரி வழியாக, 15 கி.மீ., துாரம் வீதியுலா சென்று, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து, நகரி டவுனில் உள்ள கரகண்டேஸ்வரர், தேசூர் அகரம் சிவன், கிருஷ்ணாராமாபுரம் கைலாசநாதர், சரவணா விநாயகர், பாலமங்கலம் பாலீஸ்வரர் உட்பட, 19 கிராமங்களில் இருந்து உற்சவ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் நகரி மண்டபம் விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.
பின், 21 உற்சவ சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சென்னை, திருப்பதி, புத்துார், திருத்தணி, நாராயணவனம், நகரி, கரீம்பேடு, பள்ளிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 40,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.