/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகனங்கள் தொடர் விபத்தில் செக்யூரிட்டி உட்பட மூவர் காயம்
/
வாகனங்கள் தொடர் விபத்தில் செக்யூரிட்டி உட்பட மூவர் காயம்
வாகனங்கள் தொடர் விபத்தில் செக்யூரிட்டி உட்பட மூவர் காயம்
வாகனங்கள் தொடர் விபத்தில் செக்யூரிட்டி உட்பட மூவர் காயம்
ADDED : ஜன 18, 2024 09:55 PM
திருவள்ளூர்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், நேற்று காலை 7:45 மணியளவில், சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி 'மாருதி வேகனார்' கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து, திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்த மூன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும், ஹோட்டல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும், திருவாலங்காடு, பாஸ்கர், 45, புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த பத்மராஜ், 26, தலக்காஞ்சேரி ராஜவேலு, 43, ஆகிய மூவரும் காயமடைந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார், போக்குவரத்தை சீரமைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.