/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்
/
திருத்தணி சர்க்கரை ஆலை பொதுப்பேரவை கூட்டம்
ADDED : ஜன 13, 2024 09:26 PM
திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 2023-- 24ம் ஆண்டுக்கான கரும்பு அரவை நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் ஆலையின் வரவு செலவு கணக்கை பொதுப்பேரவை கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி தலைமையில் பொதுப்பேரவை கூட்டம் நடந்தது. இதில் 2023- -24 மற்றும் 2024 - - 25ம் ஆண்டுகளுக்கான வரவு --செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பங்குதாரர்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை ஊழியர்கள் பங்கேற்றனர்.
பின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மனு அளித்தனர்.
கரும்பு விவசாயிகள் கூறுகையில், 'ஆலையை மேம்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் விளையும் 5 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்பை ஆலையில் அரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'ஆலையில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். இதனால் இளைஞர்கள் பயன்பெறுவர்' என்றனர்.

