/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
/
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
ADDED : பிப் 01, 2024 09:44 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு, பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல், ரகசியமாக கூட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க., கூட்டணி 19, அ.தி.மு.க., கூட்டணி ஐந்து என, 24 பேர் உள்ளனர். தலைவராக, தி.மு.க.,வைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கும், வழக்கம் போல் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் ரகசியமாக நடந்ததாக, அ.தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் கூட்டம் நடைபெறுவது குறித்து, கடந்த காலங்களில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிதாக வந்துள்ள கலெக்டர் பிரபுசங்கர் இந்த விஷயத்தில் தனி கவனம் எடுத்து, பத்திரிகையாளர்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

