/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி
/
சாலையில் தேங்கிய மழைநீரால் அவதி
ADDED : செப் 25, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை சேதமடைந்தும். மழைநீர் தேங்கியுள்ளதால், ஊழியர்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
பழைய சென்னை சாலையில், திருத்தணி ஊரக மற்றும் நகர மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
மாநில நெடுஞ்சாலையில் இருந்து மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலை, போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து, மண் சாலையாக மாறியுள்ளது.
தற்போது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, சகதியாக மாறியுள்ளது. இதனால், மின்வாரிய ஊழியர்கள், மின்நுகர்வோர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.