/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாள கொக்கிகள் திருடிய இருவர் கைது
/
தண்டவாள கொக்கிகள் திருடிய இருவர் கைது
ADDED : ஜூன் 24, 2025 07:38 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று அதிகாலை ரயில் பாதையில் ரோந்து சென்றனர். அப்போது, பொன்னேரி - அனுப்பம்பட்டு இடையே, இரு மர்ம நபர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை சோதனையிட்ட போது தண்டவாளத்தையும், கான்கிரீட் ரீப்பர்களையும் இணைக்கும் இரும்பு கொக்கிகள் வைத்திருந்தனர். அவர்களிடம், 27 கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில் பாதையில் சிதறி கிடந்த கொக்கிகளை சேகரித்து, எடைக்கு போடுவதற்காக எடுத்ததாக தெரிவித்தனர்.
விசாரணையில், சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்த அசு, 29, மோசஸ், 23, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.