/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் பலி
/
ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் பலி
ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் பலி
ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் பலி
ADDED : ஜூன் 14, 2025 09:00 PM
பொன்னேரி:பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஜினி மகன் குகன், 13. இவர், ஆண்டார்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம், நண்பர்களுடன் பொன்னேரி, மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
அதேசமயம், பொன்னேரி கிருஷ்ணசாமி தெருவைச் சேர்ந்த நந்தகுமார் மகன் நிஷாந்த், 16, என்பவரும் அதே பகுதியில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இவர், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
இரண்டு குழுவினரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குகன் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நிஷாந்த், குகனை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரும் நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்தனர். ஆற்றில் இறங்கி பள்ளி மாணவர்களை தேடினர். சிறிது நேர தேடலுக்கு பின், இருவரையும் சடலமாக மீட்டனர்.
இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.