/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராத 8 குடிநீர் தொட்டி திருத்தணியில் ரூ.2.75 கோடி வீண்
/
பயன்பாட்டிற்கு வராத 8 குடிநீர் தொட்டி திருத்தணியில் ரூ.2.75 கோடி வீண்
பயன்பாட்டிற்கு வராத 8 குடிநீர் தொட்டி திருத்தணியில் ரூ.2.75 கோடி வீண்
பயன்பாட்டிற்கு வராத 8 குடிநீர் தொட்டி திருத்தணியில் ரூ.2.75 கோடி வீண்
ADDED : ஜன 18, 2024 09:59 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் பெரியகடம்பூர், சிறுகுமி மற்றும் மாம்பாக்கம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்காக, 2020 - -21ம் ஆண்டில் மத்திய அரசின் 'ஜல் - ஜீவன்' திட்டத்தின் கீழ், புதிதாக குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.
அதன்படி, சிறுகுமி மற்றும் பெரிய கடம்பூர் ஆகிய ஊராட்சியில், தலா, நான்கு குடிநீர் தொட்டிகளும், மாம்பாக்கம் ஊராட்சியில், ஒரு குடிநீர் தொட்டி என, மொத்தம் ஒன்பது தொட்டிகள் கட்டுவதற்கு, 2.75 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
ஒரு குடிநீர் மேல்நிலை தொட்டி, 30.46 லட்சம் ரூபாய் வீதம், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு 'டெண்டர்' விடப்பட்டது.
தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒன்பது குடிநீர் தொட்டிகளும் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், இதுவரை எட்டு குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பெரும்பாலான குடிநீர் தொட்டிகளுக்கு மின் இணைப்பு வாங்காமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் கூறியதாவது:
மாம்பாக்கம் ஊராட்சியில் மட்டும், கடந்த இரு மாதத்திற்கு முன் ஜல் - ஜீவன் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு பெற்று குடிநீர் ஏற்றப்படுகிறது.
மீதமுள்ள, எட்டு குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றுவதற்கு தேவையான மின் இணைப்பு விரைவில் பெற்று, குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

