sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?

/

சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?

சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?

சென்னை- திருப்பதி பேருந்து நாராயணபுரத்தில் நிற்குமா?


ADDED : செப் 17, 2025 01:54 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி செல்லும் தடம் எண்:201 பேருந்து நாராயணபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவள்ளூர் ----- திருத்தணி சாலை மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம்.

இந்த கிராமம் வழியாக தினமும் தடம் எண்: 97 மற்றும் 201 அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகளை நாராயணபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மஞ்சாகுப்பம், வரதாபுரம், கூடல்வாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருவள்ளூர், திருத்தணி நகரங்களுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது சென்னை ---- திருப்பதி வரை திருத்தணி வழியாக செல்லும் தடம் எண்:201 அரசு பேருந்து தினமும் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நாராயணபுரம் வழியாக செல்லும் நிலையில், அங்கு நிறுத்தி இயக்க வேண்டும் என, நாராயணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us