/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயியை தாக்கி பைக்கை பறித்து சென்ற வாலிபர் கைது
/
விவசாயியை தாக்கி பைக்கை பறித்து சென்ற வாலிபர் கைது
விவசாயியை தாக்கி பைக்கை பறித்து சென்ற வாலிபர் கைது
விவசாயியை தாக்கி பைக்கை பறித்து சென்ற வாலிபர் கைது
ADDED : செப் 17, 2025 10:19 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த வல்லுார் வி.ஆர்.பி., நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 51; விவசாயி. இவர், கடந்த 15ம் தேதி மீஞ்சூர் அடுத்த தேவதானத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கல்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர், நடராஜனை வழிமடக்கி தகராறில் ஈடுபட்டார்.
பின், கல்லால் நடராஜனை தாக்கிவிட்டு, அவரது பைக்கை திருடிவிட்டு சென்றார்.
காயமடைந்த நடராஜன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீஞ்சூர் போலீசார் வழக்கு
பதிந்து, தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.