/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
ஞானபுரீ கோவிலில் திருவிளக்கு பூஜை
/
ஞானபுரீ கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 23, 2024 12:56 AM

திருவாரூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞானபுரீ கோவிலில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலத்தில் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம், சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்திரத்தில், ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானத்தில், 33 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கிறார்.
இந்த கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை சீதா, லட்சுமண, ஹனுமத் சமேத கோதண்ட ராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடும் நடைபெற்றன. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரர் செய்து இருந்தனர்.

