sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அ.தி.மு.க., மாஜி பஞ்., தலைவர் கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது

/

அ.தி.மு.க., மாஜி பஞ்., தலைவர் கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது

அ.தி.மு.க., மாஜி பஞ்., தலைவர் கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது

அ.தி.மு.க., மாஜி பஞ்., தலைவர் கொலை தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேர் கைது


ADDED : ஜூன் 27, 2025 03:08 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் பஞ்., தலைவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., நிர்வாகி உட்பட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, கொல்லம்பரம்பு கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன், 58; அ.தி.மு.க., கிளை செயலரான இவர், கொல்லம்பரம்பு பஞ்., தலைவராக இருந்துள்ளார். தேர்தல் தகராறு தொடர்பாக முத்து பாலகிருஷ்ணனுக்கும், தற்போதைய பஞ்., தலைவி கவுரியின் கணவர் கருணாகரன், 45, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

மேலும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியை முத்து பாலகிருஷ்ணன் நிர்வகித்து வந்தது தொடர்பாகவும், இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 24ம் தேதி சங்ககிரி விலக்கு பகுதியில் பைக்கில் சென்ற முத்து பாலகிருஷ்ணனை, அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், 49, டிப்பர் லாரியை ஏற்றி கொலை செய்தார்.

ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சவுந்தரராஜனை கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், கருணாகரன், சவுந்தரராஜன், அவரது மகன் மகேஷ், உறவினர் கற்பகராஜ் ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கருணாகரன், மகேஷ், கற்கபகராஜ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, முத்து பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, காவல் துறையின் அலட்சியம் காரணமாக கொலை நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

பதவி வெறி தலைக்கேறி விட்டதா?

அ.தி.மு.க., நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, தி.மு.க., நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது, அவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடக்கும் என்பது நாடறிந்த உண்மை. அதற்காக, எதிர்க்கட்சியை சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு, தி.மு.க.,வினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? சட்டம் - ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக்கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழகத்தை படுபாதாளத்திற்கு தி.மு.க., அரசு தள்ளியுள்ளது. முத்து பாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள தி.மு.க.,வினர் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பழனிசாமிபொதுச்செயலர், அ.தி.மு.க.,








      Dinamalar
      Follow us