ADDED : ஜன 14, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி;துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண் டிகைக்கு நேற்று ஆடுகள் வியாபாரம் அதிகளவில் இருந்தது. வழக்கமான சந்தை வியாபாரத்தை விட இரு மடங்கு அதாவது 6 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை நடந்தது.
மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலச்சேரி ஜமனாபாரி உள்ளிட்ட வெளி மாநில ஆடு ரகங்களும், கேரளாவில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

