/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போக்சோ கைதி தலைமறைவு ஜாமின் போட்ட இருவருக்கு அபராதம்
/
போக்சோ கைதி தலைமறைவு ஜாமின் போட்ட இருவருக்கு அபராதம்
போக்சோ கைதி தலைமறைவு ஜாமின் போட்ட இருவருக்கு அபராதம்
போக்சோ கைதி தலைமறைவு ஜாமின் போட்ட இருவருக்கு அபராதம்
ADDED : மார் 27, 2025 01:56 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மணிவண்ணன், 27, என்பவர் போக்சோ வழக்கில் மாசார்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜாமினில் வெளியே வந்த மணிவண்ணன் கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். மணிவண்ணனுக்கு ஜாமின் கேட்டு அவரது உறவினர்கள் திவ்யா, முனியம்மாள் ஆகியோர் படிவத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
தலைமறைவான மணிவண்ணனை கைது செய்ய நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், அவருக்கு ஜாமின் கையெழுத்திட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாசார்பட்டி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் திவ்யாவும், முனியம்மாளும் நேற்று ஆஜராகினர்.
மணிவண்ணன் தலைமறைவாக உள்ளதால், அவருக்கு ஜாமின் கையெழுத்திட்ட இருவருக்கும் தலா 15 நாட்கள் சிறை தண்டனை அல்லது தலா 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டார். 2 பேரும் தலா 10000 ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தியதால் சிறை தண்டனையில் இருந்து தப்பினர்.