ADDED : செப் 17, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் முன்புறம் உள்ள மண்டபங்களில் இரவில் தங்கி, அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோவில் முன் நாழிகிணறு செல்லும் பாதையில் அமைந்துள்ள மண்டபத்தில் பெண் ஒருவர், வாலிபரை கட்டையால் கடுமையாக தாக்குவது போல் வீடியோ பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கோவில் மண்டபத்தில் படுத்திருந்த பெண் ஒருவர், தன்னிடம், தவறாக நடக்க முயன்றதாக கூறி, வாலிபரை கட்டையால் தாக்கினார். போலீசார் சென்றபோது, சம்பந்தப்பட்ட வாலிபர் குடிபோதையில் இருந்ததால், அவரால் பேச முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் தராததால், அவரை எச்சரித்து அனுப்பினோம். கண் காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.