/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நீர்த்தேக்கத்தில் ஒதுங்கிய சென்னை வாலிபர் உடல்
/
நீர்த்தேக்கத்தில் ஒதுங்கிய சென்னை வாலிபர் உடல்
ADDED : ஜூன் 10, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார், : சென்னை, அமைந்தகரையை சேர்ந்தவர் விஜயகுமார், 22.
இவர், நண்பர்கள் ஏழு பேருடன் திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலைக்கு ஜூன் 7ம் தேதி சுற்றுலா வந்தனர். அங்கு, ஆண்டியப்பனுார் ஓடை நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த போது விஜயகுமார் மாயமானார். உடன் வந்தவர்கள் புகாரில், போலீசார் விஜயகுமாரை தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை 9:00 மணிக்கு, விஜயகுமார் சடலம் நீர்த்தேக்கத்தில் கரை ஒதுங்கியது. குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.