/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பாலாற்றில் திறக்கப்பட்டுள்ள தோல் கழிவுநீர் நுரை பொங்கிய நிலையில் ஓடும் அவலம்

ADDED : மே 10, 2025 01:49 AM
ஆம்பூர், ஆம்பூர் அருகே, கனமழையை பயன்படுத்தி பாலாற்றில், தோல் கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் நுரை பொங்கிய நிலையில், மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருப்பத்துார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் மழை பெய்தது. இதனால் பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் தோல் கழிவு நீரை நேரடியாக பாலாற்றில் திறந்துவிட்டுள்ளனர். இதனால், ஆம்பூர் அடுத்த மாரப்பட்டு பகுதியில், பாலாற்றில் அதிக துர்நாற்றத்துடன் நுரை பொங்கிய நிலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதே போன்று கழிவுநீர் அடிக்கடி திறந்து விடுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், பாலாற்றில் தோல் கழிவு நீர் கலப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.