/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: 40 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: 40 பேர் பங்கேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: 40 பேர் பங்கேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி: 40 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 23, 2024 11:18 PM

உடுமலை:மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு, உடுமலையில் நடந்தது.
உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், எண்ணும் எழுத்தும் பயிற்சி கருத்தாளர்களுக்கு, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடந்தது.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன், பயிற்சிகளை துவக்கி வைத்தார். பணியிடை பயிற்சி தலைவர் பாபி இந்திரா வரவேற்றார். பயிற்சி நிறுவன துணை முதல்வர் விமலா தேவி, முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில், செப்., மாதம் நடந்த அடைவுத்தேர்வின் அடிப்படையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக, மாணவர்களின் திறன் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது, எந்த திறன்களில் பின்தங்கியுள்ளனர், அவற்றை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் புதிய கருத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், துவக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ள, தொழில்நுட்ப சாதனங்கள் குறித்தும், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கதை, பாடல் மற்றும் தொழில்நுட்ப வழியாக பாடங்களை நடத்தும் முறைகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உட்பட ஏழு ஒன்றியங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தாளர்கள் வாயிலாக, வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான், ஆயிகவுண்டன்பாளையம் அரசு பள்ளி தலைமையாசிரியர் திலகவி கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.