/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8 தொகுதியில் 23,44,810 வாக்காளர்கள் 'வளை கரங்களின்' ஓசை ஓங்கி ஒலிக்கிறது!
/
8 தொகுதியில் 23,44,810 வாக்காளர்கள் 'வளை கரங்களின்' ஓசை ஓங்கி ஒலிக்கிறது!
8 தொகுதியில் 23,44,810 வாக்காளர்கள் 'வளை கரங்களின்' ஓசை ஓங்கி ஒலிக்கிறது!
8 தொகுதியில் 23,44,810 வாக்காளர்கள் 'வளை கரங்களின்' ஓசை ஓங்கி ஒலிக்கிறது!
ADDED : ஜன 23, 2024 01:23 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் உள்ளனர்.
சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர்களிடமிருந்து, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து, நேற்று, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று வெளியிட்டார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் இறுதி பட்டியல் நகல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து 50 ஆயிரத்து 110 ஆண்கள்; 11 லட்சத்து 94 ஆயிரத்து 358 பெண்கள்; 342 திருநங்கையர் என, இறுதி பட்டியலில் மொத்தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர் இடம்பெற்றுள்ளனர். வரைவு பட்டியலை ஒப்பிடுகையில், 28 ஆயிரத்து 699 வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
பெண்களே அதிகம்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும், சுருக்கமுறை திருத்தத்துக்குப்பின், 28 ஆயிரத்து 699 வாக்காளர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். கூடுதலாக சேர்ந்தோரில், 15,903 பேர் பெண்கள்; 12,789 ஆண்கள்; திருநங்கைகள் ஏழு பேர். எட்டு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, ஆண்களைவிட, 44,248 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் பெண் வாக்களர் கைகளே ஓங்கியுள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதியில், மொத்த வாக்காளர் 3 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரில், 1 லட்சத்து 96 ஆயிரத்து605 ஆண்கள்; 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண்கள் உள்ளனர். திருப்பூர் தெற்கு தொகுதியில், மொத்த வாக்காளர் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண்கள்; 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண்கள் உள்ளனர்.

