/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டைய கிளப்பிய பண்பாட்டு விழா! பாரம்பரியம் போற்றிய அவிநாசி மக்கள்
/
பட்டைய கிளப்பிய பண்பாட்டு விழா! பாரம்பரியம் போற்றிய அவிநாசி மக்கள்
பட்டைய கிளப்பிய பண்பாட்டு விழா! பாரம்பரியம் போற்றிய அவிநாசி மக்கள்
பட்டைய கிளப்பிய பண்பாட்டு விழா! பாரம்பரியம் போற்றிய அவிநாசி மக்கள்
ADDED : ஜன 21, 2024 01:07 AM

தரணி போற்றும் தமிழ் பண்பாட்டை, ஒரே நாளில் செய்முறை பாடம் நடத்தி, மக்களை மகிழ்வித்திருக்கிறது, அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி.
இப்பள்ளியில் ஆண்டுதோறும், மண்ணின் மனம் மாறாமல் பொங்கல் விழா, கொண்டாடப்படுவது வழக்கம்; இந்தாண்டு, வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே, பிரம்மாண்டத்தை கூட்டியிருந்தன, பள்ளி நிர்வாகத்தினர்.சூரியனுக்கு பொங்கல் படைத்து விழா துவங்க, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. நையாண்டி மேளம், பம்பை, உறுமி இசையால் அரங்கு அதிர்ந்தது. கரகாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் கண்டு, பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
கொங்கு பண்பாட்டு மையத்தின் ஆதன் பொன் செந்தில்குமார் தலைமையில், நடன கலைஞர்களுடன், பழனியப்பா பள்ளி மாணவர்களும் இணைந்து, கால்களில் சலங்கை கட்டி ஆடிய பெருஞ்சலங்கையாட்டம், கூடியிருந்தவர்களையும் ஆட வைத்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கும்மியாட்டமும், கோலாட்டமும் பாராட்டு பெற்றன. காங்கயம் காளை, நாட்டு மாடு, குதிரை, ஆட்டுக்கிடா, சேவல் என, வரிசைக் கட்டிய மண்ணின் விலங்கினங்களை கண்டு, இக்கால குழந்தைகள் வியந்தே போயினர்.
வீரத்தை பறைசாற்றும் இள வட்டக்கல் துாக்கி, பலம் காண்பித்தனர், பெற்றோர் பலர். செயற்கையாய் உருவாக்கப்பட்ட பெட்டிக் கடையில் கடலை மிட்டாய், கம்மர் கட், தேன் மிட்டாய் என, 1980களில் சுவைத்த மிட்டாய்கள் அணிவகுக்க, மலரும் நினைவுகளில் திளைத்தனர்.

