/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வுக்கு எதிராக கோஷம்
/
அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வுக்கு எதிராக கோஷம்
அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வுக்கு எதிராக கோஷம்
அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வுக்கு எதிராக கோஷம்
ADDED : பிப் 02, 2024 12:29 AM

திருப்பூர்;பட்டியலின பெண்ணை சித்ரவதை செய்த தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை கோரி, திருப்பூரில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பல்லடத்தில் தனியார் 'டிவி' நிருபர், கூலிப்படையினரால் மிக கடுமையாக தாக்கப்பட்டது உட்பட, தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு பேசினார்.
எம்.எல்.ஏ., விஜய குமார், முன்னாள்எம்.பி., சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நடராஜன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
பட்டியலின பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், தி.மு.க.,வுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.