/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி தண்ணீர் தொட்டி வாயில்லா ஜீவன்கள் அவஸ்தை
/
பராமரிப்பின்றி தண்ணீர் தொட்டி வாயில்லா ஜீவன்கள் அவஸ்தை
பராமரிப்பின்றி தண்ணீர் தொட்டி வாயில்லா ஜீவன்கள் அவஸ்தை
பராமரிப்பின்றி தண்ணீர் தொட்டி வாயில்லா ஜீவன்கள் அவஸ்தை
ADDED : ஜன 21, 2024 12:36 AM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாட்டுச்சந்தையில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பராமரிக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், வாயில்லா ஜீவன்கள் தண்ணீர் குடிக்க வழியில்லாத நிலை உள்ளது.
திங்கள்தோறும் கோவில்வழியை அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடக்கிறது. தொலைதுாரத்தில் இருந்து அழைத்து வரப்படும் மாடுகள் இங்கு வந்து தண்ணீர் குடிக்க,இளைப்பாற ஏதுவாக மாநகராட்சி சார்பில், தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சந்திராபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, சந்தை நடக்கும் நாளில் லாரியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. தொட்டி கட்டி ஓராண்டாகிய நிலையில் சுற்றிலும் முட்புதர் வளர துவங்கி விட்டது. பராமரிக்காமல் தொட்டியில் அசுத்தமான நீர் தேங்கி நிற்கிறது. மாடுகள் தண்ணீர் குடிக்க முடிக்காத நிலை உள்ளது. குடிநீர் தொட்டி, கட்டப்பட்டுள்ள சிமென்ட் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும். முட்புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்பது கால்நடை வளர்ப்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

