/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எந்தப் பிறவி புண்ணியமோ... இன்று காண்கிறோம் கும்பாபிேஷகம்!
/
எந்தப் பிறவி புண்ணியமோ... இன்று காண்கிறோம் கும்பாபிேஷகம்!
எந்தப் பிறவி புண்ணியமோ... இன்று காண்கிறோம் கும்பாபிேஷகம்!
எந்தப் பிறவி புண்ணியமோ... இன்று காண்கிறோம் கும்பாபிேஷகம்!
ADDED : பிப் 02, 2024 12:50 AM

திருப்பூர்:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. கும்பாபிேஷக ஆறாம்கால வேள்வி பூஜையில் பங்கேற்ற, ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி பேசியதாவது:
பிறவிகளிலேயே மிகவும் உயர்வான பிறவி மானிட பிறவி. மணிவாசக பெருமான், பல்வேறு பிறவிகளை அழகாக வரிசைப்படுத்தி பாடியிருக்கிறார். எத்தனை பிறவிதான் எடுக்க வேண்டும் என சிவனே பட்டியலிட்டு காட்டியிருக்கிறார். பல்வேறு பிறவிகள் இருக் கின்றன.
'மெய்யே உன் பொன் னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்' என்று பாடியது போல், மனித பிறவி மூலமாக மட்டுமே, பிறவி பயனை நிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான நிகழ்வாகவே, கும்பாபிேஷக விழா அமைந்துள்ளது.
யார் நினைத்தாலும், நினைத்தபடி கும்பாபி ேஷகம் நடத்திவிட முடியாது; இறையருள் இருந்தால் மட்டுமே, அது நிறைவேறும். உலகை ஆளும் பெருமான், நம்மிடம் இருந்து பொருளை வாங்க வேண்டுமென தீர்மானித்து, அதன்படியே வாங்கி திருப்பணிகளை செய்வார்.
பெருமான்திருவிளையாடல்கள்
உலக மக்கள் பிறவி பிணியை களைய வேண் டும் என்பதற்காகவே, பல்வேறு திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். தேவலோகம் போல காட்சியளிக்கும், இந்த யாகசாலையில் தான், அவிநாசியப்பரும், கருணாம்பிகை அம்மனும் வீற்றிருக்கின்றனர். பெங்களூரு வேதபாடசாலை மாணவர்கள், வேதமந்திரங்களை நேர்த்தியாக முழங்கி, மெருகேற்றுகின்றனர்.
அவிநாசியில்தான், பன்னிரு திருமுறைகளில் இருந்து, ஒவ்வொரு பாடலை பாடி, இறைவனுக்கு விண்ணப்பிக்கின்றனர். எந்த பிறவியில் புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை; இங்கு கும்பாபிேஷகத்தை காணும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்.
இந்நல்ல நேரத்தில், பக்தர்கள் தங்களின் விண்ணப்பத்தை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து, வேண்டியதை பெறலாம். அவிநாசியப்பர் நடத்தியது போன்ற திருவிளையாடல், நமது சமயத்தில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது.
புண்ணியம் வேண்டும்
இருந்த பொருளை இருந்தபடியே எடுத்து கொடுத்த அருளாளர்கள் மத்தியில், முதலையும் இல்லை; குளமும் இல்லை. சுந்தரர் பாடி, குளத்தில் தண்ணீர் வரவழைத்து, அதில் முதலையையும் வர வழைத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் முதலை வாய்ப்பட்ட மழலையை, உரிய வளர்ச்சியுடன் கொடுத்தது அவிநாசியப்பர்.
சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசிக்கு கொடுத்த சிறப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. திருத்தலத்தில் கால் வைக்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். பக்தர்களுக்காக, கருணாம்பிகையே நின்றிருக்கிறாள். தாயும், தந்தையுமாக நிற்கும் அவர்களே நம்மை பார்த்துக்கொள்வார்கள். கும்பாபிேஷக விழாவில், அனைவரும் தரிசித்து பலன்பெற வேண்டும்.
இவ்வாறு, தேச மங்கையர்க்கரசி பேசினார்.

