/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் நியமனம்
/
மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர் நியமனம்
ADDED : செப் 18, 2025 12:13 AM

திருப்பூர்; மாநகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, துாய்மை பணியாளர் நியமிக்கப்பட வேண்டும் என, ஏ.ஐ.,டி.யு.சி., வலியுறுத்தியுள்ளது.
ஏ.ஐ.டி.யு.சி., சுகாதார தொழிலாளர்கள் சங்க மகாசபை, ஊத்துக்குளி ரோடு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.
மாநில செயலாளர் சின்னசாமி மகாசபையை துவக்கி வைத்தார். பொதுசெயலாளர் நடராஜன், வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
புதிய தலைவராக ரவி, பொதுச்செயலாளராக நடராஜன், பொருளாளராக ராமசாமி மற்றும் துணை தலைவர்கள், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில், மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி, 1000 பேருக்கு மூன்று பேர் இருக்க வேண்டும். தற்போது பற்றாக்குறையாக உள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களும் கிடைப்பதில்லை; உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும்.
துாய்மை பணி என்பது நிரந்தர பணியாக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு என்பதால், குறைந்த கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர் நியமனம் சரியல்ல, துாய்மை பணியாளர்களை நிரந்தரமாக்கி, நியாயமான சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் சம்பள விவரம் அடங்கிய ரசீது வழங்க வேண்டும்.
துாய்மை பணியாளருக்கு, சட்டப்படி போனஸ் நியாயமாக வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து பேசி, நியாயான போனஸ் வழங்க வேண்டுமென, ஒப்பந்ததாரர்களை, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

