/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி கோவில் திருப்பணி தீவிரம்
/
அவிநாசி கோவில் திருப்பணி தீவிரம்
ADDED : ஜன 24, 2024 01:33 AM

அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும், பிப்., 2ல் நடைபெற உள்ளது. இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், கோவிலில் பல கட்டமாக திருப்பணி வேலைகள், நடைபெற்று வருகிறது. அவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதற்காக, கோவிலில் உள்ள மூலவர் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாவளையங்களை சுத்தப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டு அதற்கு பாலிஷ் போடும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இன்று பூஜை துவக்கம்
கோவில் கும்பாபிஷேகத்திற்காக, இன்று காலை, 9:00 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல், கணபதி ஹோமம் ஆகியனவும், மாலை, 6:00 மணிக்கு நிலத்தேவர் வழிபாடும் நடைபெறுகிறது. வரும், 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்குடங்களில், திருவருட்சக்திகளை ஏற்றுதல், இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவக்கம் ஆகியன நடைபெறுகிறத.

