/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
/
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
ADDED : செப் 26, 2025 06:35 AM

திருப்பூர்; கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 32 கல்லுாரிகளில் காணொலி காட்சி வாயிலாக மாணவ, மாணவியர், இந்நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர். திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொலி காட்சியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார். கலெக்டர் மனீஷ் நாரணவரே , எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவ, மாணவியர் உயர்கல்வி கற்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளால் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, ஏ.டி.எம்., கார்டுகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.