/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கறிக்கோழி கொள்முதல் விலை: உற்பத்தியாளர்கள் கவலை
/
கறிக்கோழி கொள்முதல் விலை: உற்பத்தியாளர்கள் கவலை
ADDED : ஜன 14, 2024 12:48 AM
பல்லடம்:நாடு முழுவதும், கறிக்கோழி கொள்முதல் விலை குறைந்துள்ளது, உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகம் உட்பட, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கறிக்கோழிகள் உற்பத்தி மற்றும் கொள்முதல் நடந்து வருகிறது. குறைந்தபட்சமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், கொள்முதல் விலை கிலோ 60 ரூபாய் ஆகவும், அதிகபட்சமாக, அசாம் மாநிலத்தில், கிலோ 112 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பி.சி.சி., செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
கடந்த, அக்., மாதம், கறிக்கோழி கொள்முதல் விலை, 100 ரூபாய்க்கு மேல் இருந்தது. பின், கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. டிச., மாதம், 70 ரூபாய்க்கு குறைவாகவும் சென்றது. தற்போது, 85 முதல் 100 ரூபாயாக இருந்து வருகிறது. சபரிமலை சீசன், முருக பக்தர்கள் விரதம் மற்றும் அதிக உற்பத்தி காரணமாகவும், விற்பனை குறைந்து, கொள்முதல் விலையும் சரிந்தது. பொங்கல் பண்டிகை முடிந்து விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கறிக்கோழி தீவனங்கள் உட்பட, பெட்ரோல் டீசல், ஆள் கூலி, வண்டி வாடகை உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதுமாக குறைந்துள்ள கறிக்கோழி கொள்முதல் விலை, உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

